யாருமற்ற இரயில்வே
நடைபாதையின் ஒற்றைக்
குடிநீர்க் குழாயில் சொட்டும் நீரை
குடித்து விட்டு காகம் ஒன்று
தத்தித்தாவி தண்டவாளத்தின் மீது
வந்தமர்ந்தது!

சாய்த்து தண்டவாளத்தின்
பளபளப்புக்கான காரணங்களை
அது பட்டியலிட முனைந்தது!
பயணம் செய்த பலரது
பாதம் பட்டதினாலா?
அல்லது
சதைத்துணுக்குகளில்
குருதி ஊற்றி பிடிக்கப்பட்ட
சாணத்தினாலா?
அல்லது ....
பட்டியலை முடிக்கும் முன்னரே
விபரீதம் ஒன்று அதன்
கண்களில் குடியேறத்
துவங்கியிருந்தது!
திடமாய் இருங்கள்
எக்கணமும் நிகழலாம்
மீண்டுமோர் தற்கொலை!
- இளவட்டம் (