மர்மங்களை உள்ளடக்கி
அகாலங்களில்
பரவுகிறது குளிர் இரவு
மர்மங்களை உள்ளடக்கி
அகாலங்களில்
பரவுகிறது குளிர் இரவு

தருணங்களை உதிர்க்கின்றன
கடந்து செல்லும்
நொடிகளோ நிமிடங்களோ
அல்லது
காலவரையறையின் ஏதோவொரு அளவீடோ
இருளின் மினுமினுப்பை
உதறிக் கொள்கிறது
பிரபஞ்சத்தை வரைந்து வைத்திருக்கும் மனம்
நட்சத்திரங்கள்
ஜரிகைத் துகளென
கனவுகளில் பறக்கின்றன
சூரியனில் குவிந்து
வட்டமாய் எழும் வரை!