modern art 344உன் பார்வைகள் என்பதாவது,
திரவம் நிரம்பிய பூரண மதுக் கோப்பை
வாழ்வின் இறுதித் துளி கண்ணீர்
அன்றலர்ந்த தாமரையின் வனப்பு
வெப்பத்தைப் பருகத் தரும் அதன் சிலிர்ப்பு
பெரும் உவகையுடன் தவழும் சிறுகுழந்தை
இவ்வெளி எங்கும் மிதக்கும் ஒற்றை இறகு
பௌர்ணமி பனிப்படலத்தின் மெல்லிய ஒளிக் கீற்று
அந்திம காலத்துப் பெரும் மயக்கம்
நெடிதாய் தோன்றும் கார்காலத் தயக்கம்
பருவம் மலர்ந்த பெண்ணின் முதல் மிரட்சி
ஆறுதல் உரைக்கும் பிரார்த்தனைகள்
அமுத தாரணை
பூரண இசை
மெல்லிய முத்தம்....!

- ஆனந்தி ராமகிருஷ்ணன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.