கீற்றில் தேட...

நெத்தியில் முத்தமிட்டேன்
நிலக்கடலைப் பூ வாசனை
செவ்விதழில் முத்தமிட்டேன்
வெப்பாலைப் பூ வாசனை
நாசியில் முத்தமிட்டேன்
மரமல்லிப்பூ வாசனை
கழுத்தில் முத்தமிட்டேன்
நுணாப்பூ வாசனை
நெஞ்சுக்குழியில் முத்தமிட்டேன்
முல்லைப்பூ வாசனை
கொங்கையில் முத்தமிட்டேன்
மனோ ரஞ்சிதப் பூ வாசனை
நாபிக் கமலத்தில் முத்தமிட்டேன்
செந்தாமரை வாசனை
தோள்களில் முத்தமிட்டேன்
செண்பகப்பூ வாசனை
அல்குலில் முத்தமிட்டேன்
நிலமெங்கும் புளியம்பூ வாசனை
திருப்பி அவள் முத்தமிட்டாள்
ஜாதிப் பூவில் மலர் வளையத்துடன்
ஓடிவருகிறது ஊர்
சாதிக்கு எதிரான யுத்தத்தை
சத்தமிட்டு தொடங்குவதை விட
ஒரு முத்தமிட்டுத் தொடங்குவோம்!
முத்தமே துணை

- சதீஷ் குமரன்