சொம்புகள்
சும்மா இருக்காது!
போட்டுக் கொடுக்கும்!
பொறாமையில் சுற்றும்!
சதி வேலைகள் செய்யும்!
முன்னேற்றத்தைக் கெடுக்கும்!
அதிகாரத்தோடு ஒட்டிக்கொள்ளும்!
அதிகாரத் தோரணைச் செய்யும்!
அடாவடித்தனம் செய்யும்!
சொம்படித்தலே சுகமென்று
தூக்கிக் கொண்டு திரியும்!

இத்தகையப் பித்தளைச்
சொம்புகளை யெல்லாம்
வரவேற்பறையில் வைத்து
தண்ணீர் கொடுக்கப்
பயன்படுத்துவதில்லை!
பொடக்காலியில் வைத்து
கால் கழுவ மட்டுமே
பயன்படுத்தப்படுகின்றன!

- கு.சிதம்பரம், சென்னை