பிரார்த்தனையில்
எந்தக் குழந்தையாவது
பேசினால்
அழுதால்
சிரித்தால்
அரட்டாதீர்கள்
கவனியுங்கள்
கடவுளின் மொழி
பிடிபட்டிருக்கலாம்
*
மழை வருவது போல
இருப்பது
எப்படி இருக்கிறது தெரியுமா
நீ முத்தமிடுவது போல
இருப்பாயே
அப்படி
*
முதலில் வளையலிட்டாய்
பிறகு கம்மல்
இப்போது கண்கள்
பந்தியிலா அமர்ந்திருக்கிறேன்
பருவத்தில் அமர்ந்திருக்கிறேன்
*
கடல் முன்னே காலமாய்
பல்லவன் சிலை முன்னே
காதலாய்
அருகருகே நின்றோம்
அது ஆதி நிகழ்வென்றோம்
- கவிஜி