கீற்றில் தேட...

பூட்டிய கதவுகளுக்கு
முன்னால் விரிக்கப்பட்டிருக்கும்
சாக்குப்பையின் மீது
உடலைக் கிடத்தி விட்டு
நிழலை எடுத்துக் கொண்டு
கிளம்புகிறான் ராப்பிச்சைக்காரன்

கைப்பை சகிதம்
அலுவலகத்திலிருந்து
நடந்துவரும்
நிழல் யுவதி
வீட்டில் பத்திரப் படுத்தி
வைத்திருக்கும்
தன் உடலைக் கூட
பாதையில் விரைந்து வருகிறாள்

தெருவெங்கும் முட்டிக்கொள்ளும்
மோதிக்கொள்ளும்
கட்டிக்கொள்ளும் இவை

பல்லடுக்கு மால்களில்
திரையரங்குகளில்
ஆளற்ற கவிச்சி
வீசும் சந்துகளில்
புணர்ந்து விட்டு
பிரிந்து செல்லும்
நிழல்கள் தான் என்றும்
இதயங்களைக் கொல்பவை

- தங்கேஸ்