சாலையில்
விழுந்து கிடப்பவனை
எட்டிப் பார்ப்பவன் கூட
உயர்ந்தவன்
மற்றவன்
அலுவலக அடிமை
முன்னாள் நண்பன்
ஒரு நன்னாளில்
நெஞ்சில் கை வைத்து
தள்ளி விட்டது
இன்னாளும் சுடும்
நான் நான் நான்
பேசுவது
பத்து வார்த்தைகள்
அதில் ஏழு நான்
சாலையில்
பாதிக்குப் பாதி
மனிதர்களும்
எம தூதுவர்களும்
குடிக்கும் வாய்களுக்கு
பூட்டு போடுவது சிரமம்
சரக்கு ஆலைகளுக்கு
பூட்டு போடுவது சுலபம்
கொலைகாரன் தலைவனானால்
வெற்றுக் கொண்டைகள்ஆடும்
வெட்டிக் கும்பல் கூடும்
அதென்ன டைம் பாஸ்
இனி மாற்றி எழுது
நூல் அடுக்கு
கண்ணாடி நெற்றியில்
டைம் யூஸ்
யானை வழித்தடத்தில்
சேனை உருவாக்கு
பிறகு புல்லட்டில் வந்து
ஆசி வழங்கு
அறிவிலிகள் அற்றாசிட்டி
காணும் கண்களையெல்லாம்
உடைத்து நொறுக்கும்
கவன ஈர்ப்புகள்
கண்ணாடி பார்ப்பதை
விட்டிருக்கக் கூடாது
எல்லார் கையிலும்
கேமரா
நல்லதுக்கில்லை
நானறிந்த சமூகமே
- கவிஜி