குறித்து வைத்து
முடித்துவிட்ட
ஞாயிறு வேலைகளில்
எப்பொழுதும்
இடம் பெறாத
பெற்றோர்களைச் சென்று
சந்தித்து விடவேண்டும் என்ற
குறிப்புகள் இல்லாததை
நிவர்த்தி
செய்து விடுகிறது
உறவு மரணங்களும்
அவர்களின்
விசேட நிகழ்வுகளும்
பிள்ளைகள் பிரியமாக
இருப்பதெனும் புறப்பாடாக
அவ்வப்பொழுது.
- ரவி அல்லது