கடந்துவிட நினைக்கும்
இந்த நினைவுகளை
மீட்டுக் கொடுத்தது
அற்ப நிகழ்வொன்றுதான்.
அதை விட்டுவிடவோ
விரட்டி விடவோ
எவ்வுபாயமும் இல்லை
என்னிடம் இப்பொழுது.
இடைவிடாத தொணதொணப்பில்
தொங்கிக் கொண்டிருக்கும்
இந்த நினைவென்னவோ
நடு நிசிவரை
நகர்த்தி வந்துவிட்டது
விட வேண்டுமென்று
நினைத்ததை
மறக்க வைத்து.
- ரவி அல்லது