கீற்றில் தேட...

கண்ணீரில் பிறக்கும்
கவிதைகள் எல்லாம்
சிறு சமாதானத்திற்கானதாகவே
இருந்திருக்கலாம்

கால் கடுக்க காத்திருக்கும்
எனது அன்பின் சுவடுகளது
எல்லை மீறாமலாவது
இருந்திருக்கும்

வார்த்தைகளுக்குள்
உழன்று தவித்திடும்
என் மனவெளியின்
அங்கலாய்ப்புகள் எல்லாம்
அணிவகுத்துக் கொண்டிருக்க

மீண்டும் ஒரு தழுவலாய்
நவின்று நல்குகிறது
வார்த்தைகளின் பரிமாணங்கள்

- நிவேதிகா பொன்னுச்சாமி