சுடும் வெப்பம்
கடுங்குளிர்
தாங்கிப் பழகியபின்
பெரும்பாறையானேன்
பெயர்த்தெடுக்க முடியாத
கொடு நகரில்.
என்னை நீராட்டும்
நிலவொளிக்குத் தெரியும்
எனக்குள் படிந்திருக்கும்
நீரோடையின் தடங்கள்.
வானம் பார்த்த
நிலமாய் நினைவுகள்
காலங்கள் வெடித்துக் கிடக்கும்
மன ரேகையின் புழுதியில்
துளிர்த்து காதலின்
புதர்ச் செடியாய்
சாகாவரம் கொண்டு
பூத்தாடும் ஆவாரம் பூக்களின்
துளித் தேனாய்
மணக்கிறது இச்சிறு வாழ்வு.
- சதீஷ் குமரன்