கீற்றில் தேட...

சிரித்து மகிழ்கிறேன்
நீங்கள்
சிரித்துவிடுகிற பொழுதெல்லாம்.

பயம்
கொள்கிறேன்
நீங்கள்
கோவம் கொள்ளும்
பொழுதெல்லாம்.

பாசமென
அறிகிறேன்
நீங்கள்
பரிவு
காட்டும் பொழுதெல்லாம்.

கண்ணீர்
சிந்துகிறேன்
நீங்கள்
கரிசனங்களைக்
காணும் பொழுதெல்லாம்.

நம்பி விடுகிறேன்
யாவரும்
என்னைப் போலென
உலவும் முகங்கள்
ஒப்பனைகளில்
திரிகிறதென அறியாமல்.

- ரவி அல்லது