கீற்றில் தேட...

 

சறுக்கி விளையாடும்பொழுதில்
எதிர்படும் எதையும் நினைத்து
எதுவும் செய்ய முடியாதுதான்.
குடிசையாக இருந்தாலென்னா
கோபுரமாக இருந்தாலென்னா
குறுக்கிடும்
இந்நீர்ப் போக்கின் நிதர்சனத்தில்.

***

அறுவடைக் குரல்கள்

சாதுர்யப் பிடுங்கலை
சமன் செய்ய சரிந்ததற்கு
இத்தனை கூச்சல்கள்
தேவையில்லைதான்
சம நீதியில்
இருபக்க சேதமும்
உயிர்கள் தான்.
அதென்ன ஒரு பக்கம்
மயிர்.
மறுபக்கம்
உயிர்.

- ரவி அல்லது