இனிப்பு கூடிய
சொற்கள் எப்பொழுதும்
மயங்க வைத்து விடுகிறது
மனதினை
சுவைகள் கூட்டியவாறு.
எச்சரிக்கும் எவ்வுபாயமும்
எடுபடுவதாக இல்லை
சுவை நரம்புகள்
திளைத்து திசைகள்
மாறிக் கிடப்பதால்.
பகலடங்கும் நேரம்
வத்திப் பெட்டி
தேடும் பொழுது
வாய்க்கிறது
சிறு உரசல்
தீப்பொறியாகப் பற்றி
வெளிச்சமிட அரிதெனவானவைகளால்.
விசுவாசத்தில்
வீழ்ந்து போனதால்
விடியல் என்பது
வெகுதூரம் தான்
அறியாமை இருளின்
ஆக நெடும் பயணத்தில்
நிமிர்ந்திட
ஆசைகள் கொள்ளாதபொழுது.
- ரவி அல்லது