கீற்றில் தேட...

மழைத் தவளைகளின்
சங்கீதமற்ற பெருநகரில்
நச்சுப்புகை சூழ்ந்திருக்கிறது
பெருவணிகங்களின் வலைகளில்
சிக்கிய நுகர்வுக் குப்பைகளால்
மேலும் குவிகிறது
தெருவெங்கும் நெகிழிக் குப்பைகள்.
செரிக்க முடியாமல்
பெருமூச்சுடன் நடுச்சாலைகளில்
படுத்துக் கொண்டு
எதையோ அசைபோடுகின்றன
நிலமிழந்த மாடுகள்.
வெடித்துச் சிதறுகிறது
புவியின் கருப்பை.

- சதீஷ் குமரன்