1.
கோடைவெயில்
வீதிகளில் கூக்குரலிடும்
ஐஸ் வண்டிகாரர்
வீடுகளில் அமைதியாய்
கைப்பேசியில்
குழந்தைகள்.
........................
2.
சிறுவர்கள்
இருக்கும் வீடு
அமைதியாய் இருக்கிறது
யாரிடமும் பேசாமல்
அலைபேசியில் அமைதியாய்
சிறுவர்கள்.
........................
3.
சரவெடியை
கைகளில் வெடித்தவன்
பயப்படுகிறான்
மகளின் கைகளில்
மத்தாப்பு.
...................
4.
இரவினில் தூங்க விடுவதில்லை
அடகுக் கடையில் தூங்கும்
மகளின் கொலுசு.
...................
5.
பாலாற்றில்
இருபுறமும்
கரைபுரண்டோடும்
வெள்ளம்
குழந்தைகள்
துள்ளி விளையாட
தன்னிடம் வருமென
சிறு ஓடையாய்
காத்திருக்கும்
கொட்டாறு.
- மு.பிரபு, வேலூர்.