கீற்றில் தேட...

பாரத மாதாவாக
பசுவை
அழைத்த பிறகும்
அது சிறுநீர் கழித்து
சாணியைத் தான்
போட்டது
ஒருபொழுதும்
வழியவே இல்லை
காம்பிலிருந்து
பால் தானாக,
கறந்திடும்
கயமைக்கு
முன்னால்...

- ரவி அல்லது