கீற்றில் தேட...

இனிக்க இனிக்க
பேசிய வார்த்தைகளில்
இத்தனை கொழுப்புகள்
ஆகாது தான்.
அறியாது போன நாளில்
ருசிக்குள் இருந்த பாந்தங்கள்
மெய் மறக்க வைத்தது.
இருக்கும் இத்தியாதிகளை
என்ன செய்வது
தலை கிறுகிறுக்கும் இவ்வேளையில்.
தீர்த்தம் தெளித்து
ருசித்த பிறகும்
இனிக்கத்தான் செய்கிறது.
விரட்டி விடலாம்
பசுக்களை
இழுத்து வந்தவனின் கொழுப்பில்
இத்தனை ருசிகள் இருப்பதால்.
பசுக்கள் நினைத்தது
மனிதனை நிவேந்தமிட்டதாக
கொள்கையற்று இருக்கலாம்
கொழுப்பற்று
இருக்க முடியாதென.
பாவம்
பின்னொரு நாள்
கண்டுபிடிக்கும் பொழுது
வயிறு குமட்டி
வாந்தி எடுக்காமல்
இருக்கக் கடவது.

- ரவி அல்லது