கீற்றில் தேட...

தூக்கம் தொலைந்த
காரணத்தை சொல்லவியலாது
அற்ப காரணமுடையதால்.
படுக்க இடமிருக்கிறது
பசிக்கு
உணவிருக்கிறது.
சேமித்த
பணமிருக்கிறது.
சீராட்ட
உறவும் இருக்கிறது.
பாராட்ட
கொஞ்சம் இரக்கமும் இருக்கிறது.
பிறகெப்படி
தூக்கம் தொலைந்த
காரணத்தைச் சொல்வது
வேதனை தாழாதுழலும்
பிறருக்கு முன்னால்
வெக்கமுறாமல்.

- ரவி அல்லது