கீற்றில் தேட...

யுத்தமிடும் வெய்யோன்
முத்தமிடும் அம்புலி
இடைவெளிகள் இம்சிக்கும்
இருந்தும் இசைக்கும்
வல்லமை நம் வானில்
நீலமென முப்பொழுதும்
நீயும் நானுமென
நட்சத்திரங்கள் எப்பொழுதும்
நீ அங்கிருந்தபடி
தூது விடுகிறாய்
நான் இங்கிருந்தபடி
சேதி பெறுகிறேன்
முதல் பறவை
கவிதையாகிறது
மற்றவையெல்லாம்
நம் காதலாகிறது...!

- கவிஜி