அறுத்து விடுவார்கள்.
நாளை காலை
இரண்டு மணி வாக்கில்
அதோ அந்த பெரிய
மரக்கட்டைகளின்
மையத்தில் வைத்து.
காலை கருக்கலில்
சில்லென்று நீர் அடித்து
மடி நசுக்கப்போவதில்லை இனி
அறுத்து விடுவார்கள்
அவர்களுக்கு வேண்டியதை
அளவுக்கு அதிகமாகவே
கொடுத்துவிட்டேன்
இன்னும் கொஞ்சம் கொடுத்திருக்கலாம்
கன்றுக்கென்று;
சொல்லவும் இல்லை அவளிடம்
நான் இங்கு வருவதையும்
அவள் இங்கு வரப்போவதையும்..
அழுதுவிடுவாள் அவள்.
வண்டியில் ஏற்றுகையில்
ஏதோ மாட்டி
அறுபட்ட வலி
இருக்கப்போவதில்லை
நாளை காலை
அறுத்து விடுவார்கள்
- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி (