கொடூரமாய் தீர்ந்த
கொலைகார மழையில்
முங்கிய நகரத்திற்குப் பின்னோடிய
மும்பையை.. மீன்கூட்டங்கள் கண்ணாமூச்சாடிய
மணற்-அலை காதல்கள் நெளிந்த
மெரினாவைத் தின்று சுவாசித்த
பேய்ச்சுனாமியை..
முந்தாநாள்
முழுங்கிய ராசப்பனை
இன்னும் துப்பிவிடாது
இறகு விரித்திருக்கும் ஏரியை..
அம்மா விழிகளை
அவளறியாது விலகிய
குழந்தையொன்றின் விரல்களை
குறிப்பெடுத்த வெந்நீரை..
இதுபோல்..
அதுபோல்..
நீரின் தன்மையை
உவமைப்படுத்த ஒருபோதும்
உந்தாது மனப்பருந்து,
கடலொன்றின் நடுநாவில்
காய் நகர்த்தும்
என் அண்ணனைப்போலுள்ள
கப்பலோட்டிகளை
கவனிக்கும் பொருட்டு...
- ஆறுமுகம் முருகேசன் (
கீற்றில் தேட...
மாலுமி என் அண்ணன் மட்டுமல்ல..!
- விவரங்கள்
- ஆறுமுகம் முருகேசன்
- பிரிவு: கவிதைகள்