ரசிக்கத்தக்கதாகவே
இருந்தது அது.
தேர்ந்த புல்லாங்குழல்
கலைஞன் ஒருவனின்
அத்தனை குழைவுடன்
ஒரு ராகமாய் இழுத்துப்
பேசும் மகனின்
குழலிசைப் பேச்சு
சக பள்ளித் தோழன்
ஒருவனும் சங்கீதமாய்
பேசிக் கேட்க நேர்ந்த
பொழுது வரை.
ரசிக்கத்தக்கதாகவே
இருந்தது அது.
இப்போதைய
பிரச்சனையெல்லாம்
எப்படி
அறுதியிட
ஏதொன்றின் சாயலும்
இல்லையென்று?
புதிதாய் ஒன்று
புலப்படும் நாளிலும்
எனினும்
எப்போதும்
எல்லாக்
கதவுகளையும்
திறந்து வைத்தே
காத்திருக்கிறோம்
தென்றல் வரும்
திசை நோக்கி.
-செல்வராஜ் ஜெகதீசன்(