உனக்கும் எனக்கும் சண்டை
ஓராயிரம் முறை
உன்னிடம் மன்னிப்பு வேண்டுதல்கள்

அருகில்
நெருங்கி வர நெருங்கி வர
விலகிச் செல்கிறாய்
பார்க்க மறுக்கிறாய்
ஊடல்பொழுது இப்படித்தான் என
நாடகம் நிகழ்த்துகிறாய்

எதிரும் புதிருமாய்
நம்மைப் போல
மரக்கிளையில் அமர்ந்திருக்கிறது
ஒரு ஜோடி பறவை ....!

- ச.இராஜ்குமார்

Pin It