கண்டுகொள்ளப்படாமல் போன ஒருவன்
இப்போது மாண்டு விட்டான்,
அவனைப் பேச
புதுப்புது வார்த்தைகளைத்
தேடிக் கொண்டிருக்கிறோம்...
அவனைப் பற்றி எழுத
யாரும் அறியாத சொற்களைப்
பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்...
அவனின் நிழற்படத்தில் துயரத்தை
கண்ணீர்த் துளியாய்
சொட்டிக் கொண்டிருக்கிறோம்...
அவன் இவற்றையெல்லாம்
கண்டிருந்தால்
முன்பே மரணித்திருப்பான்,
நடித்தவர்களால்
நடுத்தெருவிற்கு வந்தவனுக்கு
வேறொன்றும் எளிதில்லை...
இறப்பதை விட!

- மு.முபாரக்

Pin It