எதிர்வீட்டுச் சிறுமியின்
வெளிர்நீல பிராக்கில்
இளம்பச்சை பூக்களும்
மஞ்சள் நிற வண்ணத்துப் பூச்சிகளும்
ஈரம் சொட்ட காய்கின்றன
மாடிக் கொடியில்
ஸ்கூலிலிருந்து
வீடு திரும்பியதும்
டியூஷன் கிளம்பிவிடுவார்கள்
சிறுமியும்
இளம்பச்சை பூக்களும்
கூடவே
மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகளும்!
*****
-இளங்கோ (
கீற்றில் தேட...
இளம்பச்சை பூக்களும் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகளும்!
- விவரங்கள்
- இளங்கோ
- பிரிவு: கவிதைகள்