காத்திருக்கும்படி வந்த குறுஞ்செய்தி
கூட்டத்திலிருந்து தனிமைப் படுத்துகிறது
நேற்றைய சந்திப்பின்
இறுதி நிமிடங்களை
மனதுக்குள் வேகமாக
புரட்டிப் பார்க்க நிர்ப்பந்தித்து
பின்
அணைகிறது
எப்படியிருந்தாலென்ன?
இன்றுமொரு உரையாடலை
சாம்பல் கரைத்து
நிழலில் ஊற்ற
நெடுக நின்று இப்போதே எரியத் தொடங்குகிறது
ஆரஞ்சு நிற மின்விளக்கு
கூட்டத்திலிருந்து தனிமைப்படுத்தும்
குறுஞ்செய்திகள்
காத்திருக்கும்படியான உத்தரவுகளைத் தான்
எப்போதும் அனுப்பி வைக்கின்றன!
*****
- இளங்கோ (
கீற்றில் தேட...
நெடுக நின்று எரியத் தொடங்கும் ஆரஞ்சு நிற மின் விளக்கு
- விவரங்கள்
- இளங்கோ
- பிரிவு: கவிதைகள்