இமயமலை என்னிலும் இருக்கிறது
நீ இல்லா இதய உச்சியில்
மூச்சுத் திணறல்

*
கடல் அலுத்துக் கொள்கிறது
ஒரு குடம் நீரெடுத்து விட்டு
மீதி நதியை தேனாக்கி விட்டிருக்கிறாய்

*
கடிகாரம் இல்லா ஊரில்
நீ கண் திறக்கும் நேரம் தான்
அதிகாலை

*
அரையடி கரடில்
ஆயுள் இருட்டு
அடியாத்தி அங்கோர் அக்னிச் சுடர்

*
இன்னும் ஆறு மாசம் அலைய விடு
கழுத்து வரை காதல் வந்து
வெடித்துப் பூக்கட்டும் இதயம்

*
பெண் செருப்பு என்று சிரிக்கிறார்கள் அறியாதோர்
நான் அணிந்திருப்பது
உன் சிறப்புகளை

*
நீ அரிசி தான் விசுறுகிறாய்
காக்கை குருவி என் இனம்
சர்க்கரை எனக் கொத்துகிறது பார்

- கவிஜி