கீற்றில் தேட...

மழையில் முக்குளித்து எழுந்த
ஈரக்காற்றின் குரல்வளையை
மூச்சை உயிரைக்
கவ்விப் பிடித்து
வானுக்கும் பூமிக்கும்
கதறவிட்டு சிரிக்கிறது
கந்தக நெடி.
சிற்றுயிர்கள் பேருயிர்கள்
மூச்சடைத்து விழிபிதுங்கி
மிரள வேடிக்கைப் பார்த்தபடியே
கடக்கிறார்கள் மனம் வெடிக்காமல்.
நமத்துப் போய்க் கிடக்கிறது
யாவற்றையும் இழந்த நிலம்.

- சதீஷ் குமரன்