விலாசம் இல்லாமல்
நீ எழுதிய
கடிதத்தில்
மழைத்துளி சிந்திய போதுதான்
முடிந்திருக்க வேண்டும்
என் வாழ்க்கை!
விழுந்து விரிந்த
துளியின்
வலப்புற முடிவில்
"எப்படியாவது வந்து கூட்டிப் போ"
எங்கென்று குழம்பிய
நாட்களை
நினைவு படுத்திக்கொண்டே
முகம் சுளிக்கிறேன் -
ஒளிந்து விளையாட
கூப்பிடும் மகனிடம்.
-செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி (