வீடுகள்தோறும் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும்
மனங்கள் தோறும் உறங்கியபடியிருக்கும்
கேட்கும்போது கிடைக்காது
தேவையில்லாதபோது வந்து சேரும்
விட்டும் போகாது
விடாமலும் தொடராது
ஒரு பக்கம் சேர்க்கும்
மறுபக்கம் செலவழிக்கும்
அந்த காலத்தில் மரக்காலாகவும்
இந்த காலத்தில் குவிண்டாலாகவும்
அளவுகள் ஆளுக்காள் மாறுபடும்
யாவருக்குமான வெளிகளில்
உலவித் திரியும்
சிலருக்கே அதன் உண்மை புரியும்
தினந்தோறும் பசித்துக் கிடந்து
பசியாறினாலும்
ஒவ்வொரு வேளையும்
தேவையாய் இருக்கிறது
ஒரு பிடி காதல்..
- இசை பிரியா (