உருகும் சொற்களின் வார்ப்பெனஉலோகச் சுருள் இழைகள்
கூர் ஓரங்களைக் கொண்டு
கவனப் பிசகாகி
எழுதும்
விரல் ரேகையைக் கிழிக்கக் கூடும்
கவிதைப் பட்டறையில்
கனன்று கொதிக்கும்
உருக்கு நெருப்பின் துருத்தியொன்று
சுவாசமென
விம்மிப் புடைக்கிறது
ஒவ்வொரு முறை
மையத்தை விளிம்பு நோக்கி நகர்த்தும்போது!
****
- இளங்கோ (
கீற்றில் தேட...
விளிம்பு நோக்கி நகரும் மையமும் உலோகச் சுருள் இழைகளும்
- விவரங்கள்
- இளங்கோ
- பிரிவு: கவிதைகள்