பெரிய மக் போன்ற பளிங்கு கோப்பையில்
காபியை ஊற்றிக் கொண்டு
பால்கனியிலோ அல்லது மொட்டைமாடியிலோ
அல்லது ஜன்னல் வெளியில் நின்று
உலகமே என்னால்தான் சுழல்கிறது
போன்ற பாவனையில்
குடிக்கவே தெரியாத மாதிரி
அந்த காபியை சரித்து சரித்து குடிப்பதையோ
தொடை இறுகிய ட்ரவுசர் போட்டுக் கொண்டு
காதில் தொங்கும் இசை ஒயர்களை
அவ்வப்போது நகர்த்தியபடியே
அந்த காபி மக்கை நீட்டி நீட்டி ஆட்டியபடி
இந்த பரந்த உலகை
இப்படித்தான் பார்க்க வேண்டும்
என்பது போல பார்ப்பதையோ
நான் தெருவில் விளையாடிக் கொண்டே
கல் எடுத்து வீசி கலைத்துப் போகிறேன்
எதிர் வீட்டு குடிசையில் இருக்கும் எனக்கு
இப்படித்தான் தோன்றுகிறது....!

- கவிஜி

Pin It