சிலந்தியின் எச்சில்
அவதானித்து கொள்ளும்
இறை
வலைகொண்டு சிறைப்படும்போது
இறந்துகொண்டகாலத்தில் நின்று
பற்கள் வளர்த்திக்
காலத்திடம்
இரஞ்சிக்கொண்டது

  ****

திடீர் கடவுள்

இருப்பதெல்லாம் கொடுத்துவிட்டது
போல நின்று கொண்ட கடவுளிடம்
என்னென்னவோ வேண்டிக்கொண்டு
நீட்டிய பக்தனின் கையில்
இருந்த காணிக்கையில் நெகிழ்ந்துகொண்ட
அர்ச்சகர் கடவுளாய் தெரிந்துகொண்டார்

- சன்மது

Pin It