ஒழுங்கின் பரிபூரணம்
என் பாவனை
அசைவுக்கு அருகே தான்
நிறுத்திக் கொள்வதும் இருக்கிறது
முகம் கலையாமல் திரும்புகிறேன்
நெற்றிக் கோடுகளை
சடுதியில் இஸ்திரி செய்யும் விழிப்பு
நுண் திறவு தோள்களில்
உண்டு
நெஞ்சத்தில் மேடிட்ட வன் யாகம்
முதுகு பாராத திரும்பலில்
மூத்தவன் சொன்ன நிமிர் இருக்கிறது
வயிரற்று இருக்க கற்றேன்
வாய் திறக்க வார்த்தை உற்றேன்
அளவின் அமைப்பில்
அழகோவியம் தேவையில்லை
அற்புத மனதில் கருங்கல் சிற்பம் நான்
சுவை பட சிரிக்கிறேன்
என்னைக் கற்பனைத்த உங்களிடமும்
கொஞ்ச நேரத்துக்கு அதே
சுந்தரப் புன்னகை...!
- கவிஜி