உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும்
வல்லரசு நாடானால்
பசிக்காதா எனக் கேட்கிறது...
ஒரு குழந்தையின் வேதனையான முகம்,

விண்வெளியில் ஆராய்ச்சி
செய்தால் பசிக்காதா
எனக் கேட்கிறது...
ஒரு குழந்தையின் வலியை சுமக்கும் முகம்

கிரிக்கெட் போட்டியில்
கோப்பையை
வெற்றியாகப் பெற்றால்,
பசிக்காதா எனக் கேட்கிறது...
ஒரு குழந்தையின் ஏமாற்றமான முகம்

பல கோடி செலவு செய்து
சிலை அமைத்தால்
பசிக்காதா எனக் கேட்கிறது...
ஒரு குழந்தையின் சோர்ந்த முகம்

அமெரிக்காவிற்கு மருந்துகளைக்
கொடுத்துவிட்டால் பசிக்காத
எனக் கேட்கிறது...
ஒரு குழந்தையின் விரக்தியான முகம்

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும்
விளையாட்டு மைதானத்தை
உருவாக்கினால் பசிக்காதா
எனக் கேட்கிறது...
ஒரு குழந்தையின் பரிதாப முகம்!

மக்களின் பசி
தீர்க்க முடியாத வளர்ச்சி
எதற்கு எனக் கேட்கிறது...
பல நாள் பசியோடு
அழுது வடிந்த கண்களைக் 
கொண்ட குழந்தையின் முகம்!

- மு.முபாரக்

Pin It