இந்த சோடியம் விளக்கின்
கீழ் குரைக்கும் நாய்க்கு
எப்படி புரிய வைப்பது
நடு இரவில்
வேலை முடிந்து திரும்பிய
என் அலுவலகத் துன்பத்தை
ஒரு பயம் கலந்த உணர்வோடு
பயணிப்பதுதான்
மனித வாழ்வின் இயல்பு
எதைப் புரிந்து கொண்டு
இப்படிக் குரைக்கிறது
வாகன சப்தங்களையும்
பொருட்படுத்தாமல்
சாலையோரம் வரிசையாக
தூங்கும் சாலைவாசிகளுக்கு
பாதுகாப்புக் குரலாய்
இருக்குமென எண்ணி
மடமடவெனக் கடக்கிறேன்
இந்த சாலையை
ஒரு குற்ற உணர்வோடு.

- ப.தனஞ்ஜெயன்

Pin It