வணங்கா முடியெல்லாம்
வாழ்த்துக்கு உருகித்தான் ஆக வேண்டும்
முந்தின நொடி வரை திட்டப் பட்டுக்
கொண்டிருந்தவருக்கு
இரு கை கூப்பிய வணக்கம் வாந்தி வகையறா
ஆணுக்கு ஆண் வைக்கும் ஆப்பை விட
பெண்ணுக்கு பெண் வைக்கும் ஆப்புகள்
மகத்தானவை மானங்கெட்டவை
டாபிக் எல்லாம் பிறகு தான்
தான் பிக் தான் முதலில்
தம்தன தம்தன தாள இசை
மண்டைக்குள் வடிவேலாய் சிரிக்கும்
மூன்று உறுப்பினரோடு மூன்றாம் அணி
அமைத்தவர் மூன்றாம் நிமிடம்
தூங்கி வழிவது சரித்திரக் குறிப்புகள்
இன்விடேஷனில் பெயர் போட்டதில்
தலை விட்டு சிக்குண்டோர்
டை அடித்தும் டல் அடிப்பவர்கள்
மத்தய தர இன்னசென்ட் சிரிப்பும்
இன்ஸ்டன்ட் இங்கிதமும் பொதுவில்
வைத்து எடுக்கப் படும்
காதுள்ளோர்களை கடைந்தெடுக்க
தேடிக் கொண்டிருக்கும்
எல்லார் கையிலும் தமிழாயுதமென
மைக் இருக்கிறது.
இடையே வடை தருமோ டீ தருமோ
வெர்சடைல் இலக்கியம்.....!

- யுத்தன்

Pin It