எழுத எழுத
இறுதிப் பத்தி வராத
கவிதை பற்றிய அக்கறை இல்லை!
பொருள் மறந்து
வரிக்குள் அடங்கி விடாத
வார்த்தைகள் பெரும் வித்தைகளின்
சூட்சமமாகவும் இருக்கலாம்!
நான்காம் முறை அடித்து
ஐந்தாம் முறை திருத்திய
ஓர் எழுத்து, அனிச்சை செயலாய்
இளைப்பாறவும் சென்றிருக்கலாம்!
குறிப்பெடுத்த குறிப்புகள்
இலைமறை காயாய்
கவிக்குள்ளே நீண்ட யுத்தமும் சென்றிருக்கலாம்!
மொத்தமாய் பிராத்தனையினூடே
எழுதிய கவிதை
உனதானதாகவும் இருக்கலாம் தானே?!

- ஆனந்தி ராமகிருஷ்ணன்

Pin It