முகம் மூடி வெட்கப்பட்ட
அகம் மறந்து சிக்கிக்கிட்டன்
சிரிப்பை அடக்க முடியல உனக்கு
சிரிச்ச முகம் முடியல எனக்கு
பேச வார்த்தை இல்ல உனக்கு
பேசியும் வார்த்தை இல்ல எனக்கு
சிரிச்சிகிட்டே அழுத நீ
அழுதுகிட்டே சிரிச்சன் நான்
அடித்தொண்டையில என்னமோ அடைக்குது
ஆனாலும் அல்லிமுகம் ஜொலிக்குது
அன்பென்னும் பத்தி விரலும் பதறுது
அடியாத்தி அழகு கம்மல் விசும்புது
சீக்கிரம் பாக்கணும் சொல்ல வரல எனக்கு
சீவி சினுக்கெடுத்து பதறும் கண்ணு உனக்கு
அலைபேசி திருப்ப ஆகாயம் உனக்கு
ஆகாயம் திரும்ப அலைபேசுது எனக்கு
- கவிஜி