நயம்பட காண்கிறேன்
நளினம் கொண்டும் காண்கிறேன்
மூச்சு நிறுத்திப் பார்க்கிறேன்
முகமும் கறுத்தும் பார்க்கிறேன்
ஊர் அழுகையில்
நண்பகல் அசைகிறது
யார் யாரோ அழுதிடத்தான்
உன் பேர் இசைக்கிறது

முள் கிரீடம் கேள்விக்குறிகள்
சாட்டையடிகள் சத்திய வாக்குகள்

முயல் போல காது நீளும் கைகளில்
ஆணி அடிக்க வருவோரை
ஆண்டவனே காணட்டுமென
நானும் கூட்டத்தில் ஒளிகிறேன்
கூட்டங்கள் ஒருபோதும்
ஒளிவதேயில்லை
முழு நீள மரணம் உன் போல
யாருக்கும் இல்லை....!

- கவிஜி

Pin It