துவைக்கக் கழற்றிப் போட்ட
ராமசாமியின் அண்டர்வேரிலிருந்து
அம்பது ரூபாயைக் கத்தரித்த கையோடு
கால்தடுக்கும் லுங்கியை
பல்லில் கடித்தபடி
10B பஸ்ஸைப் பிடித்து நகரடைந்தேன்;
பாக்கெட்டைத் தடவிக் கொண்டே
அந்த மருந்தகத்தின் கண்ணாடி மேசையில்
கைகளிரண்டையும் கெட்டியாக
அழுத்தி வைத்தாலும்
பதற்றம் தொற்றிக் கொண்டது;
வேறு வழியேயின்றி
யாரும் பார்த்திராத கணம் பார்த்து
குரல் நடுங்க
"ஸ்ட்ராவ்பெர்ரி பிளேவர் காண்டம்
ஒன்னு குடுங்க"னு கேட்டு
வாங்கிப் பாக்கெட்டில் பதுக்கும்
என் சில்லறைக் காதலை
எப்படி எழுதிக் கிழிக்க?
பக்கத்து வீட்டுப் பொடக்காலியில்
தொங்கும் பாவாடை நாடாவின் நீளம் அது.

- திருமூ

Pin It