தொட்டிச் செடியைப் பார்த்து நகைப்பதுமில்லை
தோட்டத்து செடியைப் பார்த்து வியப்பதுமில்லை
மணம் கமழப் பூக்கும் பூக்களுக்கு மத்தியில்
மண் மணக்கப் பூக்கிறோம்
மானிடத்தின் மானம் காக்கப் பூக்கிறோம்
மலர் கண்காட்சியில் எனக்கு இடமில்லை
அதனாலென்ன மக்களின் அணிகலன் நான்தானே...
என்னை ரசிப்பதற்கு எவருமில்லை என்றாலும்
சமூக ரசனையின் அச்சாணி நான்.
கரிசல் காட்டின் மனதை மகரந்தமாய் ஏந்தி நிற்கிறேன்.
மண்ணின் பெருமை பூக்க வெடித்து நிற்கிறாள் ஒருத்தி.
புகுந்த வீடு போக சிரித்து நிற்கிறாள் பருத்தி.

- சதீஷ் குமரன்

Pin It