டேபிள் துடைக்கையில் தைரியத்தையும்
சேர்த்து அகற்ற வேண்டும்
தேநீர் தருகையில் கசப்பு வார்த்தைகளை
சேர்த்துக் கொள்வது இயல்பு
ஒரே நேரத்தில் நாலைந்து பேர்
அழைக்கிறார்கள்
வரும் அழுகையை சிரிப்பாக்குதல்
அவஸ்தை தான்
ஆச்சரிய அதிர்ச்சியாக ஓனரம்மா வருகையில்
மின்விசிறிக் குப்பை தலையில் கொட்டும்
ஓனரம்மா வசவு தேளைக் கொட்டும்
தினமும் ஒருவராவது லஞ்ச் வாங்கச்
சொல்லி விரட்டுவார்கள்
லஞ்சம் கிஞ்சம் தரும் பழக்கமே கிடையாது
சுட சுட வடை போண்டா பரிமாறி
முடிப்பதற்குள் வாயூறுவதை சமாளிப்பது
தொண்டை அரிக்கும் சிரமம்
அம்மாவிடம் அலைபேசியில் சொன்னான்
வேலையெல்லாம் பரவால்ல
ஆபீஸ் பாய்ன்னு சொல்றது தான்
ஒரு மாதிரி இருக்கு....!

- கவிஜி

Pin It