பெரியார் ஊர்வலம்
சேரிகளில்
கலவரமில்லை... பேரமைதி.
பிள்ளையார் ஊர்வலம்
பற்றி எரிகிறது குடிசைகள்
விண்ணை முட்டும் வெறி
கொக்கரிப்பு ஆயுதங்களில்
பேரவலம்..!
தேவைப்படுகிறது இன்னும்
பெரியாரின் தடி...
தட்டியெழுப்பவும்
தட்டிக் கேட்கவும்
சனாதனங்களின் தடை உடைக்கவும்...
தேவைப்படுகிறார் எங்கெங்கும் என்றென்றும்
பகுத்தறிவு ஞானத்தந்தை.

- சதீஷ் குமரன்

Pin It