அப்பாவோடு சேர்ந்து 
குடித்தே செத்திருக்கலாம் 
குடிகாரன் புள்ள என
பள்ளியில் என்னையும் 
குடிகெட்ட குடும்பத்தில் 
பொறந்தவ என அக்காவையும் 
ஏளனப்படுத்தும் இந்த ஊரில் 
வேறு எந்த பாவமும் செய்யவில்லை நாங்கள் 
வக்கற்ற ஆட்சியில் 
பிறந்ததைத் தவிர .
 
- சதீஷ் குமரன்
Pin It