இளைய மகன்
கீழத்தெரு பெண்ணை
கட்டிக்கிட்டு வந்தபோது
எம் மவன
எதக் காட்டி மயக்குனாலோ
சண்டாளி மவோ
என புலம்பி தீர்த்த
இதே வீராயிதான்
மூத்த மகன்
மேச்சாதி பொண்ணை
கூட்டிவந்த போது
எம் பிள்ள
அதிர்ஷ்டக்காரன் எனக் கொஞ்சி
முன்னின்று
ஆராத்தி எடுத்தவள்....

##########

பெய்யாம கெடுத்த மழ
மண்ண தரிசாக்கி
பட்டணத்து வீதியில 
சித்தாளு வேலைக்கென 
சிதறடிச்சி 
விட்ட போதும் 
கலங்காத வீராயி
கலங்கித்தான் போனா...
வேல பாக்கும் இடத்துல
கீழத்தெரு முருகம்மாவும் 
தான் குடிக்கும் 
கொடத்துலயே
தண்ணி மோந்து 
குடித்த போது....

- வீர பாண்டி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.