modi cow

பசு இறைச்சி
பன்றி இறைச்சி
எதுவாயினும்
செரித்துவிடுகிறது
இரைப்பை .......

கடவுளால் விலக்கப்பட்ட
உணவையும்
கடவுளாய்
வணங்கப்படும் எதையும்
செரித்துவிடும்
எங்கள் பசிகொண்ட
இரைப்பை .......

பசி
பாழாய்போன
பண்பாடுகள்
மதவாத மூடத்தனங்கள்
அனைத்தையும்
செரித்துவிடும்

உணவுகளை
இரைப்பையால்
மட்டுமே
செரிக்கமுடியும்
மதக்கோட்பாடுகளை
சுமந்துகொண்டுள்ள
மூளையால் அல்ல

மரணத்தின் பின்னர்
விலக்கப்பட்ட
உணவை
உண்டதற்காக
உங்களின்
இறைவன்
எங்களுக்கு
நரகம் தரலாம் .....

நரகத்திலேனும்
பசியற்ற வயிற்றை
படைக்கச்சொல்லுங்கள்
உங்கள் இறைவனை

இல்லையெனில்
உங்கள்
இறைவனே
எங்களுக்கு
இரையாகலாம்
எச்சரிக்கை ....

Comments

5 comments

5
kailesh
அருமை .அருமை.
seyon yazhvaendhan
அருமை
வீர பாண்டி
நன்றி தோழர் கைலேஸ் மற்றும் சேயோன்
pagutharivu
உணவுகளை இரைப்பையால் மட்டுமே செரிக்க முடியும்- மதக்கோட்பாடுகளை சுமந்து கொண்டுள்ள மூளையால் அல்ல! சாட்டையடிக் கவிதை. நன்றி தோழர்.
வீர பாண்டி
நன்றி தோழர்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.