rss with sword

அது உங்களை காக்குமென்ற நம்பிகையை
எப்பொழுதோ விட்டொழிக்கத்
தொடங்கிவிட்டீர்கள்

சொல்லடிகளில் இருந்து தப்புவிக்க
விமர்சனத் தாக்குதலில் தப்புவிக்க
அக்குளில் வைத்து
அடை காக்கின்றீர்கள் அதை

ஆனாலும் சொல்லடிகளும்,
விமர்சனங்களும்
அதிகரித்ததே ஒழிய
குறையும் வழி புலப்படவில்லை உங்களுக்கு

அது உங்களைக் காக்கும்
என்கிற நம்பிக்கையில் இருந்து பின்வாங்கி
அதைக் காக்கும் முனைப்பில்
இறங்விட்டீர்கள் வீதியில்
இரத்தப்பசி கொண்ட ஆயுதங்களோடு

ஆனாலும் சொல்லடிகளும் விமர்சனங்களும்
குறையவேயில்லை
மென்மேலும் கூடத்தான் செய்கிறது

விமர்சனங்கள் உங்கள்
சிந்தனையின் செவிப்பறையை
தீண்டிவிடா வகையில்
பெரியதோர் பூட்டு கொண்டு
புலன்களோடு மனிதத்தையும்
பூட்டிக்கொண்டு
உங்கள் கடவுகளைக் காக்க
சாத்தான்களின் அவதாரம் எடுக்கிறீர்கள்

மனம் என்னும் சாத்தானின்
படைப்பினம் தான் கடவுள் என்பதை மறந்து

விமர்சனங்கள் எழும் குரல்வளையை நோக்கி
ஆயுதங்களைப் பிரயோகிக்கிறீர்கள்
எவ்வித குற்றவுணர்வும் இன்றி

கழுத்து அறுக்கப்பட்ட பொழுதும்
விமர்சனங்கள்
கூடிக்கொண்டே போவதைக் கண்டு
அதிர்ச்சியடைகிறீர்கள்
அச்சமடைகிறீர்கள்

மதவாத மூடர்களே
இன்னுமா புரியவில்லை
ஆயுதங்களால் அறுத்துவிட முடியாது
பகுத்தறிவால் வளர்ந்த
மனித சமூகத்தின் தொடர்ச்சியை
ஏன்? எதற்கு? எப்படி? என்ற
கேள்விகளின் நீட்சியை

எல்லாம் தெரியும் உங்களுக்கு
ஆனாலும்
கடவுள் தேவைப்படுகிறார்
மக்களை அடக்கியாள
மதரீதியாக பிளவுபடுத்த
ஆட்சியமைக்க,
அதிகாரம் செலுத்த...

ஆதலால்
விமர்சனங்களுக்குப் பதிலாக
உங்கள் அதரப்பழசான
ஆயுதங்களையே பயன்படுத்துகிறீர்கள்
எங்களின் மீது

நாங்களும் விடுவதாக இல்லை
ஏனெனில்
நாங்கள்
தபோல்கர்கள்
பன்சாரேக்கள்
கல்புர்கிகள்
பெரியாரின் வாரிசுகள்.....

Comments

1 comment

1
seyon yazhvaendhan
சிறந்த படைப்பு தோழர்!
அதரப்பழசான - அறுதப் பழசான

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.